50. நின்றசீர் நெடுமாற நாயனார்

அமைவிடம் : temple icon.thillaivaz anthanar
வரிசை எண் : 50
இறைவன்: சொக்கநாதர்
இறைவி : மீனாட்சியம்மை
தலமரம் :கடம்பு
தீர்த்தம் : பொற்றாமரைக்குளம்
குலம் : மன்னர்
அவதாரத் தலம் : மதுரை
முக்தி தலம் : மதுரை
செய்த தொண்டு : அடியார் வழிபாடு
குருபூசை நாள் (முக்தி பெற்ற மாதம்/நட்சத்திரம்) : ஐப்பசி - பரணி
வரலாறு : இவர் பாண்டிய நாட்டு மன்னர். சமண சமயம் சார்ந்து இருந்தார். இவரது மனைவியார் மங்கையர்க்கரசியார். இவர் திருஞானசம்பந்தரைத் தமது அமைச்சர் குலச்சிறையார் உதவியுடன் வரவழைத்து கணவருக்கு உற்ற வெப்பு நோயை நீக்கினார். அதனால் மன்னன் சைவம் திரும்பினான். கூன் வளைந்திருந்த அவனது உடம்பும் நேரானது. எனவே நின்றசீர் நெடுமாறன் என்னும் பெயர் பெற்றான்.
முகவரி : அருள்மிகு. மீனாட்சியம்மை திருக்கோயில், மதுரை– 625001 மதுரை மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 – 12.30 ; மாலை 04.00 – 08.00
தொடர்புக்கு : தொலைபேசி : 0452-2349868, 0452-2344360

இருப்பிட வரைபடம்


வளவர்பிரான் திருமகளார் மங்கையருக் கரசியார்
களபமணி முலைதிளைக்குந் தடமார்பிற் கவுரியனார்
இளஅரவெண் பிறையணிந்தார்க் கேற்றதிருத் தொண்டெல்லாம்
அளவில்புகழ் பெறவிளக்கி அருள்பெருக அரசளித்தார்.

- பெ.பு. 4081
பாடல் கேளுங்கள்
 வளவர்பிரான்


Zoomable Image

நாயன்மார்கள் தலவரிசை தரிசிக்க    பெரிய வரைபடத்தில் காண்க